ஆக்சிஜன் இல்லாமல் சூரியன் எப்படி எரிகிறது ?


பொதுவாக நெருப்பு தோன்ற மூன்று முக்கிய காரணிகள் வேண்டும் அவை
1.வெப்பம்
2.எரிபொருள்
3.ஆக்சிஜன் (அ) காற்று

தீயை அணைக்க வேண்டுமானால் மேற்கூறிய ஏதேனும் ஒரு காரணியை நீக்கினாலே போதும் ..உதாரணமாக அடுப்பை அணைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?? எரிபொருளை நிருத்துகிரிர்கள் ..சூரியனில் அவ்வாறு இல்லை ...
அங்கே காற்றும் இல்லை ஆக்சிஜனும் இல்லை !!!
உண்மையை சொல்ல வேண்டுமானால் சூரியன் எரியவே இல்லை ..
ஆம் !! அங்கே நடப்பது nuclear fusion எனப்படும் அணு இணைவு வினை
நான்கு ஹைட்ரோஜென் அணுக்கள் சேர்ந்து ஒரு ஹீலியம் அணுவாக மாறுகிறது ..இதில் வேடிக்கை என்னவென்றால் நான்கு ஹைட்ரோஜென் அணுக்களின் நிறை ஒரு ஹீலியம் அணுவின் எடையை விட அதிகமா உள்ளது ..அப்படி என்றால் மிச்ச நிறை என்னவானது ???..அதற்கு ஐன்ஸ்டீன் தாத்தா பதில் சொல்வார் E=mc^2  என்றார் அவர்...

 E = mc^2\,
இங்கு
  • E = ஆற்றல்,
  • m = நிறை (அ) திணிவு,
  • c = வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 
நாம் தொலைத்தது நிறையை தானே ...அந்த மிச்ச நிறை E ஆற்றலாக மாறி விட்டது நண்பர்களே ..அந்த ஆற்றல் ஒளியையும்,வெப்பத்தையும் உள்ளடக்கியது ஆக சூரியன் வெப்பத்தையும் ஒளியையும் அணு இணைவு வினையால் வெளியிடுகிறது ..அதுவே சூரியன் காற்று இல்லாமலே எரிய காரணம் ....சூரியன் மட்டுமில்லை எல்லா நட்சத்திரமும் இதைத்தான் செய்கிறது  

{ 0 கருத்துகள்... read them below or add one }

Post a Comment

உங்கள் மனதில் பட்டதை சொல்லுங்கள்